வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

கடவூர் அருகே வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-20 18:30 GMT

வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம்

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள டி. இடையப்பட்டி ஊரின் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட வனச்சரக அலுவலர் தண்டபாணி மற்றும் வனவர்கள் இரவு நேரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்ட பகுதிக்குச் சென்று பார்த்தபொழுது தலையில் பேட்டரி லைட் பொருத்திய நிலையில் கையில் துப்பாக்கியுடன் 3 பேர் சுற்றி திரிவதை பார்த்துள்ளனர்.இதையடுத்து உடனடியாக அவர்களை வனச்சரக அலுவலர் மற்றும் வனக்காப்பாளர்கள் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில், அவர்கள் கடவூர் அருகே உள்ள தேக்கமலை கோவில்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 31), மகாமுனி (55) மாணிக்கம் (45) என்பது தெரியவந்துள்ளது.இவர்கள் 3 பேரும் வனப்பகுதியில் உள்ள முயல், உடும்பு மற்றும் அவர்கள் கண்களுக்கு தெரியக்கூடிய வன விலங்குகளை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க வந்தது தெரியவந்துள்ளது.

3 பேர் கைது

இதையடுத்து அந்த 3 பேரையும் வனத்துறை அலுவலர்கள் பிடித்து அவர்களிடம் இருந்த துப்பாக்கி, துப்பாக்கியில் சுடுவதற்கு பயன்படுத்தக்கூடிய பால்ரஸ் குண்டுகள், பேட்டரி லைட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் இது தொடர்பாக அந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து, குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த 3 பேரும் குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்