மிளா இறைச்சி சமைத்து சாப்பிட்ட 3 பேர் கைது

கடையநல்லூர் அருகே மிளா இறைச்சி சமைத்து சாப்பிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-05 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி முந்தல் பகுதியில் செந்நாய் கடித்த மிளாவின் இறைச்சியை சிலர் சமைத்து சாப்பிடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கடையநல்லூர் பிரிவு வனவர் முருகேசன், வனகாப்பாளர்கள் அய்யாதுரை, ராமச்சந்திரன், மாதவன், வனக்காவலர்கள் சின்னத்தம்பி, சுகந்தி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சொக்கம்பட்டி அருகே முந்தல் பகுதியில் செந்நாய் கடித்து இறந்து கிடந்த மிளாவின் இறைச்சியை புன்னையாபுரத்தை சேர்ந்த கருப்பையா (வயது 33), பேச்சி முத்து (45), மாரியப்பன் (40) ஆகியோர் பங்குபோட்டு சமைத்து சாப்பிட்டனர். இதையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். மிளாவின் இறைச்சி, தோல் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 (9)-ன் கீழ் வழக்குப்பதிந்து, 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்