கொடைரோடு அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது

கொடைரோடு அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-10 19:34 GMT

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு சுங்கச்சாவடி வழியாக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வருவதாக ஐ.ஜி. தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கிராஜா, அழகுபாண்டி மற்றும் போலீசார் கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில், கஞ்சா இருந்ததும், அதனை கடத்தி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், கொடைரோடு அருகே உள்ள ஜல்லிபட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29), விஷ்வா (24) மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் (37) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்