கொலை முயற்சி வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

நடிகர் விஜய் படம் பார்க்க சென்ற போது நடந்த தகராறில் கொலை முயற்சி வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பொள்ளாச்சி சப்-கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-07-13 21:00 GMT

பொள்ளாச்சி

நடிகர் விஜய் படம் பார்க்க சென்ற போது நடந்த தகராறில் கொலை முயற்சி வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பொள்ளாச்சி சப்-கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நடிகர் விஜய் படம்

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் யசோதரன். இவர் தனது சகோதரர்கள் ஜெயகாந்தன், ஜெகதீஸ், உறவினர் விஜயேந்திரன் ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு பொள்ளாச்சியில் ஒரு தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த புலி திரைப்படத்தை பார்க்க சென்றனர்.

அங்கு படம் திரையிட தாமதம் ஆனதாக தெரிகிறது. இதுகுறித்து தியேட்டர் ஊழியர்களிடம் கேட்ட போது, அங்கு வந்த சிலர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஜெயகாந்தன், விஜயேந்திரன் ஆகியோருக்கு சோடா பாட்டிலால் தாக்கியதில் காயமடைந்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

7 ஆண்டு சிறை

விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த இப்ராகிம் (வயது 37), அப்துல் பாசித் (31), கோட்டூர் ரோடு பாலு (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

மேலும் ரூ.5500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட அதிகாரி மற்றும் சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்திய தலைமை காவலர் செந்தில்குமார் ஆகியோரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்