திருட்டு, அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் திருட்டு, அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2023-10-16 19:44 GMT

சேலத்தில் திருட்டு, அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

திருட்டு, வழிப்பறி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா பட்டாபி நகரை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மகன் சத்தியமூர்த்தி (வயது 24). இவர் கடந்த மே மாதம் பெரமனூர் பகுதியில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை திருடினார். அதே போன்று பல்வேறு திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டார். இதையடுத்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அதே போன்று சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் பிரேம்குமார் (22). இவர் சேலத்தில் அடிக்கடி திருட்டில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவர் அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கைதான சத்தியமூர்த்தி, பிரேம்குமார், செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

அதன்பேரில் சேலம் மத்திய சிறையில் உள்ள சத்தியமூர்த்தி, பிரேம்குமார், செந்தில்குமார் ஆகிய 3 பேரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்