சேலத்தில் வெவ்வேறு இடங்களில் மாணவன் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு இடங்களில் மாணவன் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வெவ்வேறு இடங்களில் மாணவன் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பள்ளி மாணவன்
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் ஜெய்பிரசாத் (வயது 15). சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
சம்பவத்தன்று மாணவன் உறவினர் வீட்டில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்த அவரது உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்
சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (40). சம்பவத்தன்று இவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தச்சு தொழிலாளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). தச்சுச்தொழிலாளி. இவர் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ஜோதி என்பவரை திருமணம் செய்து கொண்டு அம்மாபேட்டையில் வசித்து வந்தார். நேற்று காலை அவர் தூக்கில் தொங்கினார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் தொங்கியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.