சேலம் அருகே கருப்பூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர், நேற்று முன்தினம் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்சில் வந்த போது, சரவணனின் சட்டைப்பையில் இருந்த 300 ரூபாயை மர்ம நபர்கள் 2 பேர் நைசாக திருடியதாக தெரிகிறது.. இதைப்பார்த்த சக பயணிகள் அந்த நபர்களை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜய் (45), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (33) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் குகை பகுதியை சேர்ந்த முருகேசன் (40) என்பவரிடம் 200 ரூபாயை திருடிய கிச்சிபாளையத்தை சேர்ந்த பாபுவை (38) போலீசார் கைது செய்தனர்.