விவசாயி வீட்டில் திருடிய 3 பேர் கைது

மணிமுத்தாறு அருகே விவசாயி வீட்டில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-28 19:27 GMT

அம்பை:

மணிமுத்தாறு அருகே உள்ள மேல ஏர்மாள்புரம், மேல காலனியை சேர்ந்தவர் தனசிங் (வயது 63). இவர் தனது வீட்டிற்கு பின்புறம் விவசாய வேலைக்கான பைப்புகளை வைத்திருந்தார். கடந்த 26-ந் தேதி அன்று தனசிங் வீட்டிற்கு பின்புறம் சென்று பார்த்தபோது பைப்புகளை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் விசாரணை நடத்தினார். விசாரணையில், கீழ ஏர்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த சீனிபாண்டி என்ற சுரேந்தர் (36), பாஸ்கர் (41), பூதப்பாண்டி என்ற சட்டநாதன் (44) ஆகியோர் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.23,875 மதிப்புள்ள பைப்புகளையும் பறிமுதல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்