மோட்டார்சைக்கிள் திருடிய 3 பேர் கைது

உத்தமபாளையத்தில் மோட்டார்சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-03 18:45 GMT

உத்தமபாளையம் திடீா் நகரைச் சோ்ந்தவர் அசோக்குமார் (வயது 24). பள்ளி ஆசிரியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிள் திருடுபோனது. இதுகுறித்து அசோக்குமார், உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிலை மணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (26) என்பவர் மோட்டார்சைக்கிள் திருடியதும், அதனை கேரள மாநிலம் மூணாறு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (21), ஆனந்த் (20) ஆகியோரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனா்.

Tags:    

மேலும் செய்திகள்