மது விற்ற 3 பேர் கைது; 120 பாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற 3 பேர் கைது; 120 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-29 19:00 GMT

திருமயம் பகுதியில் மதுபாட்டில்களை டாஸ்மாக் கடையில் வாங்கி கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக திருமயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மாறன் உள்ளிட்ட போலீசார் திருமயம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்ற ஏனப்பட்டியை சேர்ந்த குமார் (வயது 47), அண்டைக்குடி பட்டியை சேர்ந்த பாண்டி (39), திருமயம் அகில்கரையை சேர்ந்த நாராயணன் (44) ஆகிய 3 பேரை ைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்