அண்ணாமலை நகரில்1¼ கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

அண்ணாமலை நகரில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-03-20 19:56 GMT


அண்ணாமலைநகர்,

சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் நேற்று மதியம் மாரியப்பாநகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகமான முறையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அண்ணாமலைநகர், கோவிந்தசாமி நகரை சேர்ந்த கவுதம் (வயது 22), அம்மாபேட்டை அக்ரகார தெருவை சேர்ந்த மோதிலால் (22), அம்மாபேட்டை இந்திராநகர் பகுதியை சேர்ந்த சைபால் என்கிற ரஞ்சித் (20) என்று தெரிந்தது. அவர்களை சோதனை செய்த போது, அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்