விடுதி ஊழியரை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது

கோவையில் ஓரினச்சோ்க்கைக்கு அழைத்ததால் விடுதி ஊழியரை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-23 23:00 GMT

சிங்காநல்லூர்

கோவையில் ஓரினச்சோ்க்கைக்கு அழைத்ததால் விடுதி ஊழியரை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விடுதி ஊழியர்

கோவை வரதராஜபுரத்தை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். இவர் சிங்காநல்லூரில் உள்ள தங்கும் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறப்படுகிறது. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகி வந்தனர்.

அப்போது விடுதி ஊழியர், இஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபரிடம் நாம் 2 பேரும் தனிமையில் ஜாலியாக இருக்கலாம் என கூறி அழைத்தார். இதற்கு வாலிபரும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர்கள் நீலிகோணாம்பாளையம் ரெயில்வே கேட் அருகே சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி விடுதி ஊழியர் அங்கு சென்று வாலிபரின் வருகைக்காக காத்திருந்தார்.

பீர்பாட்டிலால் தாக்குதல்

அப்போது சிறிது நேரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான வாலிபர் அங்கு வந்தார். இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது விடுதி ஊழியர் அந்த வாலிபரிடம் அநாகரீகமான முறையில் நடந்ததுடன், ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அவரது நண்பர்கள் 2 பேரை செல்போன் மூலம் அங்கு வரவழைத்தார்.

அங்கு வந்த அவரது நண்பர்கள் விடுதி ஊழியரின் நடவடிக்கையை கண்டித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து பீர்பாட்டிலால் விடுதி ஊழியரை தாக்கி மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பி சென்றனர்.

3 பேர் கைது

இதில் காயமடைந்த விடுதி ஊழியரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விடுதி ஊழியரை தாக்கிய சிங்காநல்லூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆலன் சாயா (19), நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த மோகனசுந்தர் (22), மற்றும் வரதராஜபுரத்தை சேர்ந்த கங்காதரன் (21) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்