பெண்ணை தாக்கிய 3 பேர் கைது

பெண்ணை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-16 20:29 GMT

திசையன்விளை:

திசையன்விளை மன்னர் ராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் வியாகப்பன். இவருடைய மனைவி மரிய ராசாத்தி (வயது 50). இவருடைய தம்பி அந்தோணிராஜ். இவருக்கும், இவருடைய சகோதரர் அமிர்தராஜிக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்தது. இதில் மரியராசாத்தி, அமிர்தராஜிக்கு ஆதரவாக செயல்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணிராஜ், அவருடைய உறவினர்களான மார்ட்டின், பெனிட் உள்ளிட்டவர்கள் மரியராசாத்தியின் வீட்டுக்குள் நுழைந்து அவதூறாக பேசி, அவரை செங்கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராஜ், மார்ட்டின், பெனிட் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்