தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-17 18:45 GMT

கோவையை அடுத்த பேரூர் பூலுவபட்டி சித்திரைச்சாவடி மெயின் ரோடு ஆறுச்சாமி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவருக்கு சொந்தமான இடத்தை துடியலூர் வெள்ளக்கிணறை சேர்ந்த நளராஜன் (வயது 53) குத்தகைக்கு எடுத்து ஓட்டல் கட்டி வருகிறார்.

அந்த கட்டிடத்தில் பன்னீர் செல்வம் (24), செந்தமிழ் (26), ஈரோடு நேதாஜி வீதியை சேர்ந்த கிருஷ்ணன் (26) ஆகியோர் பிளம்பிங் வேலை செய்து வந்தனர்.

அங்கு வடிவேலம்பாளையம் பட்டக்காரர் வீதியை சேர்ந்த சதீஷ்குமார் (35), செம்மேடு முட்டத்துவயலை சேர்ந்த கார்த்திக் (வயது 24), செம்மேடு விவேகானந்தர் வீதியை சேர்ந்த மணிகண்டன் (31) ஆகிய 3 பேர் வந்தனர்.

அவர்கள், ஓட்டல் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும் ஓடுகள், பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியையும் உடைத்து சேதப்படுத்தினர்.

இது குறித்த புகாரின் பேரில் சதீஷ்குமார், கார்த்திக், மணிகண்டன் ஆகிய 3 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கைதான 3 பேரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்