தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
ஊத்தங்கரையில் தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை
பாலக்கோடு தாலுகா தடி கிராமத்தை சேர்ந்தவர் நேதாஜி (வயது 23). கூலித்தொழிலாளி. ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள கரிபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (24). உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கரிபெருமாள் வலசை கிராமத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் நேதாஜி தாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கணபதி (24), கோவிந்தன் (47), செல்வம் (20) ஆகிய 3 பேரை சிங்காரப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.