அதிக பாரத்துடன் சென்ற 3 லாரிகள் பறிமுதல்
மார்த்தாண்டத்தில் அதிக பாரத்துடன் சென்ற 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் அதிக பாரத்துடன் சென்ற 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் வழியாக கேரளாவுக்கு கனரக லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அவ்வாறு செல்லும் லாரிகள் அதிக பாரத்துடன் செல்கிறது. இதை தடுக்க போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நேற்று அதிகாலையில் மார்த்தாண்டம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக களியக்காவிளை நோக்கி அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்று கொண்டிருந்த 3 கனரக லாரிகளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரிகளை பறிமுதல் செய்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.