ரூ.17½ லட்சத்தில் 3 புதிய மின்மாற்றிகள் அமைப்பு
விக்கிரமசிங்கபுரம் அருகே ரூ.17½ லட்சத்தில் 3 புதிய மின்மாற்றிகள் அமைத்து திறக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே அயன் திருவாலீஸ்வரம் ஊராட்சி ராமச்சந்திரபுரத்தில் கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 17.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 கிலோவாட்ஸ் திறனுடைய மூன்று மின் மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டன.இதனை மக்கள் பயன்பாட்டிற்காக அம்பை எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தொடங்கி வைத்தார். இதில் மின்வாரிய அதிகாரிகள் ராமக்கிளி, விஜயராஜ், ஆக்னஸ் சாந்தி மற்றும் அ.தி.மு.க. அம்பை ஒன்றிய செயலாளர் விஜய பாலாஜி, அம்பை நகராட்சி கவுன்சிலர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.