மேலும் 3 பேருக்கு கொரோனா

Update: 2022-06-19 15:40 GMT


திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 11 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் குணமடைந்தார்.

இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 896 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,052 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்