3 மணி நேரம் மின்தடை

மயிலாடுதுறையில் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது

Update: 2022-08-11 17:33 GMT
மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் திடீரென மின் தடை ஏற்பட்டது. ஆனால், நீண்டநேரமாகியும் மின் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், மாலை 6 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் சுமார் 2¾ மணி நேரத்திற்கு பிறகே கிடைத்தது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக வர்த்தகர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல அடிக்கடி நடக்கிறது. ஆகவே, மயிலாடுதுறை மக்களின் நலன்கருதி தடையின்றி மின்சாரம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மின் தடைக்கான காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் பிரேக்கர் திடீரென உடைந்து விட்டது. அதனை சீரமைக்கும் பணி நடந்தததால் மின்தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது என்று தெரிவித்தனர்.







Tags:    

மேலும் செய்திகள்