விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு
விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.;
நரிக்குடி அருகே அ.முக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராக்கப்பன். இவர் 2 வெள்ளாடுகள் வளர்த்து வந்தார். இந்த வெள்ளாடுகளை வீட்டின் அருகில் உள்ள வயலில் மேய்த்து வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார். இந்தநிலையில் இவரின் 2 ஆடுகளும், சண்முகம் என்பவரின் வெள்ளாடும் சேர்ந்து மேய்ந்து கொண்டிருந்தது. இந்த ஆடுகள் திடீரென மயங்கி விழுந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த ராக்கப்பன் ஆட்டின் அருகே சென்ற போது ஆடுகள் விஷம் கலந்த அரிசியை தின்று இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராக்கப்பன் அளித்த புகாரின் பேரில் அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிசியில் விஷம் கலந்தது யார்? எதற்காக வைத்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.