கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது

புளியங்குடியில் கஞ்சா வியாபாரிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-08 21:09 GMT

புளியங்குடி:

தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் புளியங்குடி உட்கோட்ட சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் புளியங்குடி மரக்கடை தெருவை சேர்ந்த ஒருவர் மூலம் கஞ்சா வியாபாரியான புளியங்குடி வீரப்பசாமிகோவில் தெருவை சேர்ந்த சாகுல்ஹமீது (வயது 48) என்பவரை தொடர்பு கொண்டு கஞ்சா வேண்டும் என்று கூறி வரவழைத்தனர்.

அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சா வியாபாரிகளான புளியங்குடியை சேர்ந்த ராஜ்குமார் (46), வாசுதேவநல்லூரை சோ்ந்த கண்ணன் (43) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்