தேர்தல் பறக்கும் படை சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.3½ கோடி பறிமுதல்

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 4-வது தளத்தில் மாநில அளவிலான வாக்காளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-18 23:30 GMT

கோப்புப்படம் 

சென்னை,

நடைபெற உள்ள தேர்தலில் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை, சோதனைச்சாவடிகளை நிறுவி பண நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி ரூ.2.10 கோடி ரொக்கப்பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று காலை 9 மணி வரையில் மேற்கொண்ட சோதனையில் ரூ.2.81 கோடி ரொக்கப்பணம், 0.26 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், 0.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், 0.18 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.3½ கோடி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு உதவும் வகையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 4-வது தளத்தில் மாநில அளவிலான வாக்காளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் இலவச எண் 180042521950 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு வாக்காளர்கள் போன் செய்து தகவல்களை பெறலாம்

Tags:    

மேலும் செய்திகள்