சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது
சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை போலீசார் குளித்தலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை காவிரி ஆற்றங்கரை பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்த மணி (வயது 55), குளித்தலை அருகே உள்ள வை.புதூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி (27), நடுவதியம் பகுதியை சேர்ந்த விவேக் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 சேவலையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.