தந்தை-மகனை தாக்கிய 3 பேர் கைது

தந்தை-மகனை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-09 20:00 GMT

நெல்லை தாலுகா திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவரின் மகன் மாடசாமி (வயது 23). கூலி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நல்லமுத்து (55), ஆயிரம் (20), லட்சுமணன் (20) ஆகியோருக்கும் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் மாடசாமி அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நல்லமுத்து, ஆயிரம், லட்சுமணன் ஆகியோர் சேர்ந்து அவரை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், அதை தடுக்க வந்த மாடசாமியின் தந்தை பரமசிவனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாடசாமி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்