லட்சுமிநரசிம்மர் கோவிலில் 2-வது நாள் டோலோ உற்சவம்

சோளிங்கர் லட்சுமிநரசிம்மர் கோவிலில் 2-வது நாள் டோலோ உற்சவம் நடந்தது.

Update: 2022-10-07 18:49 GMT

சோளிங்கர்

சோளிங்கர் லட்சுமிநரசிம்மர் கோவிலில் 2-வது நாள் டோலோ உற்சவம் நடந்தது.

சோளிங்கரில் உள்ள லட்சுமிநரசிம்மர் கோவிலில் 3 நாள் டோலோ உற்சவம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி, பக்தோசித பெருமாள் தங்கக் கேடயத்திலும், அமிர்தவல்லி தாயார் தனியாக ஒரு தங்கக்கேடயத்திலும், ஆண்டாள் நாச்சியார் வெள்ளிக்கேடயத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

முன்னதாக பெருமாளுக்கும், தாயார்களுக்கும் அபிஷேகம், அலங்காரம், சிறப்புப்பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்