ரூ.2,819 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் ரூ.2 ஆயிரத்து 819 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் ரூ.2 ஆயிரத்து 819 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
குடிநீர் திட்ட பணிகள்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துறையின் மூலம் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான தொடக்க விழா மற்றும் பேரூராட்சிகள் நிர்வாக துறையின் மூலம் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் ஷிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குராலா, கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் ரூ.2ஆயிரத்து 819.78 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளவுள்ள பணிகளை தொடங்கி வைத்து, சாயல்குடி பேரூராட்சியில் ரூ.1 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை வளாக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
இந்நிகழ்ச்சியில் நவாஸ்கனி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம், குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ரகுபதி, கண்காணிப்பு பொறியாளர் (பேரூராட்சிகள்) திருமாவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ராமநாதபுரம் வந்த அமைச்சர் கே.என்.நேருவை, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் நகராட்சி ஆணையாளர், கவுன்சிலர்கள் வரவேற்றனர்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல், முதுகுளத்தூர் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், முதுகுளத்தூர் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், கடலாடி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளர்கள், தொழிலாளர் அணி கண்டிலான் முத்துராமலிங்கம், நெசவாளர் அணி பாப்பாகுளம் முருகன், ஓட்டுனர் அணி ஆப்பனூர் ராஜேஷ் பாண்டியன், சாயல்குடி நீர் பாசன சங்கத் தலைவர் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சித் தலைவர்கள் மங்களசாமி, ஜெயலட்சுமி வடமலை, ராஜேந்திரன், தென்னரசி செல்லபாண்டியன், கன்னியம்மாள் சண்முகவேல், கோகுலம் மருது பாண்டியன், இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியேந்திரன், சாயல்குடி பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ், சாயல்குடி நகர் இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ் ராம், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் அருள்பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.