கோவில்பட்டியில்28 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டியில்28 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2022-10-14 00:15 IST

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கோவில்பட்டி இளையரசனேந்தல் பகுதியில் நின்ற லாரியில் 40 கிலோ எடை கொண்ட 28 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இதனை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசி பதுக்கியவர்களை தேடி வருகின்றனர்.

இதே போன்று வல்லநாடு அருகே நின்ற மினிவேனை போலீசார் திடீர் சோதனை செய்தனர். அந்த மினிவேனில் 13 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசி கடத்தி வந்த சிவராமமங்கலத்தை சேர்ந்த வீரசெல்வம் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து 13 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் மினிவேனையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்