ரூ.2.68 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
ரூ.2.68 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் வி.கைகாட்டி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள சுதாகர்(வயது 34) என்பவரது மளிகை கடையில் ரூ.2 லட்சத்து 68ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சுதாகரை போலீசார் கைது செய்தனர்.