காட்பாடியில் 26 மில்லி மீட்டர் மழை பதிவு

காட்பாடியில் 26 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.;

Update:2023-05-04 18:23 IST

வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் வெப்பம் தணிந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக 100 டிகிரிக்கும் குறைவாக வெயில் பதிவாகி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, பொன்னை, அம்முண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் சிறிது நேரம் மழை பெய்தது. அதனால் சாலையோரம், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்பாடியில் 26 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மற்ற இடங்களில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அம்முண்டி-16.80, பொன்னை-12, வேலூர்-8.80, மேல்ஆலத்தூர்-3.20, பேரணாம்பட்டு-3, கே.வி.குப்பம்-0.80 மில்லி மீட்டர் மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்