திருச்சி மத்திய மண்டலத்தில் மாயமான 26 குழந்தைகள் 3 நாட்களில் மீட்பு

திருச்சி மத்திய மண்டலத்தில் மாயமான 26 குழந்தைகள் 3 நாட்களில் மீட்கப்பட்டனர்.

Update: 2023-06-10 17:56 GMT

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.கார்த்திகேயன் மேற்பார்வையில் திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் கடத்தல் தடுப்புபிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்கும் தீவிர தேடுதல் வேட்டை கடந்த 7-ந் தேதி முதல் நடத்தப்பட்டு வந்தது. இதில்் கடந்த 3 நாட்களில் மட்டும் மாயமான 26 குழந்தைகள் (4 ஆண் மற்றும் 22 பெண் குழந்தைகள்) கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரிடம் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டனர். இதில் புதுக்கோட்டை-3, கரூர்-1, பெரம்பலூர்-4, அரியலூர்-2, தஞ்சை-8, திருவாரூர்-3, நாகப்பட்டினம்-3, மயிலாடுதுறை-2 குழந்தைகள் அடங்குவர். மேலும், குழந்தைகள் கடத்தல் தடுப்புபிரிவு தனிப்படை போலீசார் மூலம் காணாமல் போன குழந்தைகளை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெறும் என மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்