திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு

Update:2023-08-18 22:39 IST

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து 25 ஆயிரம் பேர் மதுரை மாநாட்டில் கலந்து கொள்வது, அதற்கான வாகன வசதிகள் குறித்து நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகளுக்கு மாநாட்டு பாஸ் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், கவுன்சிலர் கண்ணப்பன், வக்கீல் அணி செயலாளர் முருகேசன்,பகுதி செயலாளர் மகேஷ்ராம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்