24-ந் தேதி கோடைகால இலவச சித்த மருத்துவ முகாம்
கோடைகால இலவச சித்த மருத்துவ முகாம் பெரம்பலூரில் 24-ந் தேதி நடக்கிறது.
பெரம்பலூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த சிறப்பு முகாமை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைக்கிறார். முகாமில் பெண்களுக்கான கருப்பை கட்டி, சினைப்பை நீர்க்கட்டி, தைராய்டு, அதிக உதிரப்போக்கு, மாதாந்திர தீட்டுப்பிரச்சினை, மூட்டுவலிகள், தோல்நோய்கள், சளி, இருமல், மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவு, ஆஸ்துமா, சர்க்கரைநோய், இதயநோய், ரத்த கொதிப்பு நோய்க்கு இலவச பரிசோதனை மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்பட இருக்கிறது. முகாமில் மூலிகை கண்காட்சி மற்றும் சித்தமருந்துகள் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. ஆங்கில மருந்துகளை பல ஆண்டுகள் தொடர்ந்து உட்கொண்டு வரும் நிலையில், கட்டுப்படாத நிலையில் உள்ளவர்களும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் முகாமில் பங்கேற்பவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் சூரணம், கபசுரகுடிநீர் சூரணம் இலவசமாக வழங்கப்படும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.