247 மின்கம்பங்கள் சீரமைப்பு

சிவகாசி கோட்டத்தில் சாய்ந்த நிலையில் இருந்த 247 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது என மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.

Update: 2023-09-01 21:54 GMT

சிவகாசி, 

சிவகாசி கோட்டத்தில் சாய்ந்த நிலையில் இருந்த 247 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது என மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.

சரிந்த மின்கம்பங்கள்

சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்வயரால் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகாசி கோட்டத்தில் உள்ள பல இடங்களில் சரிந்து கிடக்கும் மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சிவகாசி கோட்ட மின்வாரிய அதிகாரி பாவநாசம் பல்வேறு பகுதியில் ஆய்வு செய்து பழுதான மின்கம்பங்களையும், சரிந்து கிடந்த மின் கம்பங்களையும் சரி செய்ய உத்தரவிட்டார்.

மின்பாதை சீரமைப்பு

இதுகுறித்து பாவநாசம் கூறியதாவது:- சிவகாசி கோட்டத்தில் உயரழுத்த மின் பாதையில் 108 பழுதான மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. தாழ்வழுத்த பாதையில் 242 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. சாய்ந்த நிலையில் இருந்த 247 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள உயரழுத்த மின் பாதையில் 87 புதிய மின் கம்பங்கள் இடைச்சொருகள் செய்யப்பட்டுள்ளது. மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள தாழ்வழுத்த மின் பாதையில் 125 புதிய மின் கம்பங்கள் இடைசொருகள் செய்யப்பட்டு தாழ்வழுத்த மின்பாதை சீரமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டதால் அப்பகுதியில் சீரான மின்வினியோகம் கிடைக்கும் என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்