236 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

ராணிப்பேட்டையில் 236 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் அடையாள அட்டை வழங்கினார்.

Update: 2022-12-06 13:38 GMT

ராணிப்பேட்டையில் மாதாந்திர மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முகாமில் கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் 124 நபர்களுக்கும், காது கேளாதோர் 48 நபர்களுக்கும், கண் பாதிக்கபட்பட்ட 37 நபர்களுக்கும், பொது நல மருத்துவம் தொடர்பாக 12 நபர்களுக்கும் மற்றும் குழந்தை நல மருத்துவம் தொடர்பாக 15 நபர்களுக்கும் சம்மந்தப்பட்ட மருத்துவர்களால் மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 236 பேருக்கு தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுடன் கூடிய அடையள அட்டைகளை வழங்கினார்.

மேலும் 29 நபர்களுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது. அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வேண்டி 12 நபர்களும், வங்கிக் கடன் வேண்டி 8‌ நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 9 நபர்களும், சக்கர நாற்காலி வேண்டி 5 நபர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் வார செவ்வாய்க்கிழமை தோறும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.

முகாமில் மாற்றுத்‌ திறனாளிகள் நலத்துறை முடநீக்கவியல் வல்லுநர் ஸ்டெல்லா மேரி, எலும்பியல் மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்