கனமழை பாதிப்பு காரணமாக 23 ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நெல்லையில் கனமழை பாதிப்பால் பல்வேறு இடங்களில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Update: 2023-12-19 02:37 GMT

நெல்லை, 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.

இந்த கனமழை பாதிப்பால் பல்வேறு இடங்களில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 23 ரெயில் சேவைகளை ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி முன்பதிவு இல்லாத நெல்லை-செங்கோட்டை, நெல்லை - நாகர்கோவில் ரெயில்கள், நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்சி-திருவனந்தபுரம், செங்கோட்டை-நெல்லை, திருச்செந்தூர்-எழும்பூர், திருச்செந்தூர்-வாஞ்சி மணியாச்சி உட்பட 23 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்