22,258 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வினை எழுதினர்

100 மையங்களில் 22,258 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வினை எழுதினர். 1,040 பேர் வரவில்லை.

Update: 2023-03-13 20:32 GMT


100 மையங்களில் 22,258 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வினை எழுதினர். 1,040 பேர் வரவில்லை.

பிளஸ்-2 தேர்வு

பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் மற்றும் சிவகாசி கல்வி மாவட்டங்களில் 97 தேர்வு மையங்கள், 3 தனித் தேர்வு மையங்கள் ஆக மொத்தம் 100 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களில் 10,853 மாணவர்களும், 12,446 மாணவிகளும் ஆக மொத்தம் 23,299 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 10,285 மாணவர்களும், 11,973 மாணவிகளும் ஆக மொத்தம் 22, 258 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

567 மாணவர்களும், 473 மாணவிகளும் ஆக மொத்தம் 1,040 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஒரு மாணவருக்கு மொழித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுதிய 105 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

பாதுகாப்பு பணி

மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது. இவர்களுக்கு வசதியாக தரைத்தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் 7 இடங்களில் வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு 20 வழித்தட அலுவலர்கள் மூலம் 24 மணி நேரமும் 20 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் 104 முதன்மை கண்காணிப்பாளர்கள், 104 துறை அலுவலர்கள், 1,236அறை கண்காணிப்பாளர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதுவதற்கு 110 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களை கொண்டு 5 சிறப்பு பறக்கும் படை குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்வு மையங்கள், மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ.க்கள் மற்றும் பிற துறை அலுவலர்களை கொண்டு தேர்வுக்குழு தேர்வுகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்