தொழிலாளிக்கு 22 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

Update: 2023-05-18 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்தவர் பெனட்டிக் என்பவரின் மகன் அந்தோணி மார்க்ஸ் (வயது 52). ெதாழிலாளி. இவர் கடந்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி 13 வயது சிறுமியை நைசாக பேசி வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி மார்க்சை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கோபிநாத், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்தோணி மார்க்ஸ்க்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்