சேலம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.;

Update:2022-09-23 02:12 IST

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 13 பேர், கெங்கவல்லியில் 4 பேர், ஆத்தூரில் 3 பேர், சேலம் ஒன்றியம் மற்றும் நங்கவள்ளியில் தலா ஒருவரும் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்