குமரியில் புதிதாக 21 பேருக்கு கொரோனா
குமரியில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.;
நாகர்கோவில்,:
குமாி மாவட்டத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் 310 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 21 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அகஸ்தீஸ்வரம் பகுதியில் 6 பேர், குருந்தன்கோடு பகுதியில் 2 பேர், ராஜாக்கமங்கலம் பகுதியில் 3 பேர், திருவட்டார் பகுதியில் 3 பேர், தோவாளை பகுதியில் 3 பேர், தக்கலை மற்றும் முன்சிறை, மேல்புறம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 12 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர். தொற்று பாதித்த அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.