1,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.21½ கோடி கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.21½ கோடி கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.;

Update:2023-01-03 17:45 IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.21½ கோடி கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் கூட்டுறவு துறை சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜெயம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ், கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை வழங்கி பேசினார்.

அப்போது கருணாநிதி ஆட்சி காலத்திலும், மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்திலும் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பல அறிவித்து வருகின்றனர்.

நடப்பாண்டில் சுமார் 1,449 குழுக்களுக்கு ரூ.56 கோடியே 18 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுவதன் மூலம் மீண்டும் கடன் பெற்று மகளிர் சுய உதவி குழுவினர் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சுய உதவி குழுவினர் மாநில அளவில் முதன்மையாக வர வேண்டும் என்றார்.

ரூ.21 கோடியே 68 லட்சம் தள்ளுபடி

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்ட 1000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 12 ஆயிரத்து 293 உறுப்பினர்களுக்கு ரூ.21 கோடியே 68 லட்சம் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பணியில் இருக்கு போது இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதார்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டது.

இதில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட மேற்பாவை பொறியாளர் சி.பழனிராஜீவ், செயற்பொறியாளர்கள் வி.ஜெகனாதன், மு.ராஜசேகரன், பா.ராஜஸ்ரீ, துணை பதிவாளர்கள் ராஜசேகரன், வசந்தலட்சுமி, கமலகண்ணன், பிரேம், ஆரோக்கியராஜ்,

ஒன்றிய குழுத்தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமாள கலையரசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இல.சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்