தக்கலை அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்....!

தக்கலை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது.

Update: 2022-05-18 06:07 GMT
தக்கலை,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து வீடுகளுக்கும் செல்லும் விதமாக குடிநீர் குழாய் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் தக்கலை அருகே சுவாமியார்மடத்தில் ஒரு மருத்துவமனை முன்பாக ரோட்டோரத்தில் பொருத்தியுள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து வெளியேறியது. 

இதனை கண்ட அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகள் இதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த பதிவுகள் சமூக வலைத தளத்தில் வேகமாக பரவிவருகின்றது.

மேலும் செய்திகள்