ரத்த உறவு திருமணங்களில் தமிழ்நாடு முதல் இடம்..!
ரத்த உறவில் திருமணங்கள் செய்வதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
சென்னை:
தேசிய குடும்ப நல ஆய்வின் ஐந்தாவது சுற்று அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதில் மக்கள்தொகை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் மக்கள்தொகையின் பண்புகள் குறித்த விரிவான தகவல்களை அறிக்கை கொண்டுள்ளது. இதில் ரத்த உறவு திருமணங்கள் குறித்து ஒரு ஆய்வரிக்கை இடம் பெற்றிருந்தது.
அதாவது ரத்த உறவு முறை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்யும் போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைப்பாடு, ரத்த சோகை அல்லது மரபணு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும் தென் மாநிலங்களில் ரத்த உறவு திருமணங்கள் தான் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. தமிழகத்தில் 28 சதவீத மக்கள் ரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதாக தகவல்கள் கூறுகிறது.
இந்த ரத்த உறவு திருமணங்கள் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தடுக்க ரத்த உறவு முறை திருமணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தென்மாநிலங்களில் ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதல் இடத்திலும் அதை தொடர்ந்து கர்நாடகா 27 சதவீதமும், ஆந்திராவில் 26 சதவீதமும், புதுச்சேரியில் 19 சதவீதமும், தெலுங்கானாவில் 18 சதவீதமும் ரத்த உறவு திருமணங்கள் நடப்பதாக தகவல்கள் கூறுகிறது.