இரு கால்களையும் முடக்கிய விபத்து - தேர்வெழுத மகளை தூக்கி வந்த தந்தை - நெகிழ செய்த காட்சி

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாணவி சிந்து. 12ம் வகுப்பு மாணவியான இவர் சில நாட்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கினார்

Update: 2022-05-05 11:07 GMT
 தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று ஆரம்பமாகின. சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாணவி சிந்து. 12ம் வகுப்பு மாணவியான இவர் சில நாட்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கினார் .அதனால், காலில் பலத்த காயம் அடைந்த அவர் நடக்க முடியாத நிலையில் வீட்டில் இருந்தே பாடங்களை படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று ஆரம்பித்தன .தன்னால் நடக்க முடியாத சூழலிலும்  கூட தேர்வு எழுத வேண்டும் என  மாணவி தன் தந்தையிடம் கூறியுள்ளார்.தனது மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என எண்ணி அவர் தனது மகளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார்.நடக்க முடியாத சூழ்நிலையிலும் மாணவி சிந்து தேர்வெழுத வந்தது ஆசிரியர்கள், மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்