பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரங்கசாமி வாழ்த்து
பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி
பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரங்கசாமி வாழ்த்து
பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை), எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. 11-ம் வகுப்பு தேர்வுகள் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. பிளஸ்-2 தேர்வுகள் நாளையும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளன.
நம்பிக்கை
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து தேர்வுக்கு தயாராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவதன் மூலம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர் கல்வியை படிக்கும் வாய்ப்பை பெற முடியும்.
எனவே பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களை பெற்று வாழ்வில் நல்ல நிலையை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.