நெல்லையில் பலத்த காற்றுடன் கனமழை...!

நெல்லை மாநகர பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

Update: 2022-05-04 11:47 GMT
நெல்லை,

நெல்லை மாநகர பகுதியில் இன்று மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 3 மணிக்கு வானம் கருத்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், 3. 30 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.  

நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை சாந்திநகர் தச்சநல்லூர், டவுன், கொண்டாநகரம், சுத்தமல்லி, பேட்டை உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

இந்த மழை சுமார் 45 நிமிடம் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதைப்போன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இன்று மாலையில் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் சாரல் மழை போல் மழை தூறிக்கொண்டிருந்தது.

மேலும் செய்திகள்