செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா

காரைக்கால் செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழாவில் 5 தேர்கள் பவனி சென்றது.

Update: 2022-05-01 18:39 GMT
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு வீதி தருமபுரத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 5 தேர் பவனி நடைபெற்றது. காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணிராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மின்விளக்கு அலங்காரத்தில் 5 தேர்கள் ஒரே நேரத்தில் பவனி சென்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்