மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் - முதல்-அமைச்சர் வாழ்த்து

உலகம் போற்றும் உழைப்பாளர் நாளான மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Update: 2022-04-30 04:57 GMT

சென்னை,



மே 1 உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், எங்கும் மக்களாட்சி மணம் இனிதே வீசட்டும் என கூறி வா​ழ்த்து தெரிவித்துள்ளார்.

​இதுபற்றி முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மே 1, உலகம் போற்றும் உழைப்பாளர் நாள்.  பாடுபடும் பாட்டாளிகள் சிந்தும் வியர்வைக்கும், அவர் தம் உரிமைக்கும் உரிய நாள் என தெரிவித்து உள்ளார்.

அந்நாளில், கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளதாகவும், ஏனோதானோ என நடைபெற்று வந்த கூட்டங்கள் இனி, ஆண்டுக்கு 6 முறை பயனுள்ள வகையில் பாங்குடன் நடைபெற அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்களாட்சியில் மக்கள்தான் முதலாளிகள் என்றும், அவர்களின் குரல் வலிமையாகவும் அதிகமாகவும் ஒலிக்க வேண்டும் என்றும் அந்த வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

மே 1 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் ஜனநாயக காற்று வீசட்டும்.  மக்களாட்சி எனும் மலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மலரட்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்