ஏனாமை சேர்ந்தவருக்கு கொரோனா

ஏனாமை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

Update: 2022-04-28 18:20 GMT
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 238 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் ஏனாமை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது ஒருவர் ஆஸ்பத்திரியிலும், 7 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 236 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 696 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 237 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 79 ஆயிரத்து 733 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்