அரசு பஸ்சில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்....!

திருச்சி அருகே அரசு பஸ்சில் ஆபத்தான நிலையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.

Update: 2022-04-27 14:15 GMT
திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சோமரசம்பேட்டை, வியாழன் மேடு வழியாக கரூர் மாவட்டம் நெய்தலூர் காலனிக்கு அரசு டவுன் பஸ் சென்று வருகிறது.

இந்த பஸ் வியாழன்மேடு பகுதியில் இருந்து அருகில் உள்ள பள்ளிக்கு செல்லும் போது  கூட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் இரண்டு படிக்கட்டிலும் ஆபத்தான நிலையில் தொங்கியபடி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கின்றனர்.

இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில்,

இந்த குறிப்பிட்ட நேரத்தில் வரக்கூடிய அரசு பஸ்சில் பயணம் செய்தால் தான் சரியான நேரத்தில் செல்ல முடிகிறது. இதற்கு பின்னால் வரக்கூடிய அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பள்ளி நேரங்களில் கூடுதலான அரசு பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 


மேலும் செய்திகள்