அரியலூர்: மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விபத்து - தந்தை, மகன் உயிரிழப்பு...!

அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் நுங்கு வியாபாரிகள் தந்தை, மகன் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2022-04-24 06:45 GMT
அரியலூர், 

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்( 65) அவரது மகன் வெங்கடேஷ் (45) இருவரும் நுங்கு வியாபாரிகள்.

இவர்கள் தனது மோட்டார் சைக்கிளில் நுங்குகளை ஏற்றிக் கொண்டு கீழப்பழுவூர் சென்று உள்ளர். பின்னர், கீழப்பழுவூர் அருகே சாலையோரம் நுங்குகளை இறக்கி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்துவதற்காக இருவரும் சாலையை கடந்து உள்ளனர். 

அப்போது  தஞ்சையிலிருந்து அரியலூர் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது  மோதி உள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்டு தந்தையும், மகனும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் விரைந்து சென்று தியாகராஜன் மற்றும் வெங்கடேசன் உடல்களை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சாலை விபத்து குறித்து கீழப்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்